வெளிநாட்டுப் பங்குதாரர் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் சார்பாக இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக பணம் அனுப்ப உதவும் ஒரு வசதியை வழங்குவதற்காக SWIFT என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தினைச் செய்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
பயனாளிகள் இதன்மூலம் தமது வங்கிக் கணக்கில் உடனடியாகப் பணம் பெற இயலும்.
எல்லை கடந்த உள்நாட்டுப் பணப் பரிவர்த்தனைகளுக்காக SWIFT gpi எனும் உடனடி பணம் வழங்கும் ஒரு வசதியை வழங்குவதில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல் வங்கியும், உலகளவில் இரண்டாவது வங்கியும் ஐசிஐசிஐ வங்கியே ஆகும்.
2 லட்சம் வரையிலான தனிப்பட்ட பண வழங்கீடு ஆனது SWIFT gpi வசதி மூலம் அனுப்பப் படும்.
இது உடனடியாக செயல்படுத்தப்பட்டு இந்தியாவிலுள்ள எந்தவொரு வங்கியிலும் உள்ள பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.