TNPSC Thervupettagam
November 28 , 2021 1002 days 599 0
  • மேற்பரப்பு நீர் மற்றும் பெருங்கடல் நில அமைப்பு ஆய்வுத் திட்டமானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • SWOT (Surface Water and Ocean Topography Mission) திட்டமானது ஐக்கிய ராஜ்ஜியத்தின் விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புகளுடன் கூடிய, நாசா மற்றும் பிரான்சு தேசிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றிற்கிடைப்பட்ட ஒரு ஒத்துழைப்புத் திட்டமாகும்.
  • SWOT ஆய்வுத் திட்டத்திற்கான செயற்கைக் கோளானது புவியிலுள்ள பெருங் கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட உப்புநீர் மற்றும் நன்னீர் ஆதாரங்களின் உயரம் குறித்த தரவுகளை சேகரிக்கும்.
  • இது உலகெங்கிலும் உள்ள நீர் ஆதாரங்களின் அடர்த்தி மற்றும் அமைவிடங்களைக் கண்காணிப்பதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவி வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்