சீனாவிற்கு அடுத்தப் படியாக T+1 பங்கு ஒப்பந்தத்தினை படிப்படியாக அமல்படுத்திய 2வது நாடாக இந்தியா மாறியுள்ளது.
இதற்கு முன்பாக இந்தியாவில் பங்குகளுக்கான ஒப்பந்த காலமானது T+2 என்ற நிலையில், அதாவது பங்குகளை வாங்குவதற்கு/விற்பதற்கு 2 நாட்களுக்குப் பிறகு என்று இருந்தது.
T என்பது வர்த்தக/பரிமாற்ற தினம் அதாவது, பங்குகள் வாங்கப்பட்ட/விற்கப்பட்ட ஒரு தினமாகும்.
இங்கு T+1 என்றால் உண்மையான பங்கு ஒப்பந்தமானது அடுத்த நாளில் மேற் கொள்ளப்படும் என்று பொருளாகும்.