பாதுகாப்பு அமைச்சகம் ஆனது T-72 ரக பீரங்கி எந்திரங்களை வாங்குவதற்காக என்று ரஷ்யாவின் ரோசோபோரோனெக்ஸ்போர்ட்டு என்ற நிறுவனத்துடன் 248 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், ஆவடியில் உள்ள ஆயுதத்துடன் கூடிய வாகன உற்பத்தித் தொழிற் சாலைக்கான தொழில்நுட்ப (ToT) பரிமாற்றச் செயல்முறையும் அடங்கும்.
இந்திய இராணுவத்தில் அஜயா என்று பெயரிடப்பட்ட T-72 பீரங்கியானது, 1970 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இதில் 780 HP எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.