TNPSC Thervupettagam

T+1 தீர்வு சுழற்சி

January 30 , 2023 664 days 418 0
  • இந்தியா, இதற்கு முந்தைய T+2 சுழற்சி முறையில் இருந்து பங்குகளுக்கானச் சந்தை அளவிலான பரிவர்த்தனை+1 (T+1) என்ற தீர்வு முறைக்கு மாறியது.
  • இந்தப் புதிய முறையானது முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • சந்தை மூலதனமாக்கல் மூலமாக சிறிய நிறுவனங்களில் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை இது கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • T+2 தீர்வு சுழற்சியைக் கடைப்பிடிக்கும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகியவற்றிற்கு முன்னதாக, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த முறைக்கு மாறிய இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
  • ஒரு வர்த்தகம் என்பது தனித்தனி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தகம், கணக்கு நிறைவு மற்றும் தீர்வு ஆகிய மூன்று முக்கியச் செயல்பாடுகளை உள்ளடக்கியது.
  • அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் என்பது இதில் வர்த்தகம் ‘T’ என்ற எழுத்தினைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது.
  • தீர்வு கிடைக்கப் பெற்ற நாளினைத் தொடர்ந்து வரும் நாளிற்கு மறுநாள் கணக்குத் தீர்வு நடைபெறுவதால், முந்தைய வழிமுறை 'T+2' என வரையறுக்கப்பட்டது.
  • இனிமேல், இது அடுத்த நாளே தீர்வு செய்யப்படுவதால் இம்முறை T+1 என்றழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்