இந்தியா, இதற்கு முந்தைய T+2 சுழற்சி முறையில் இருந்து பங்குகளுக்கானச் சந்தை அளவிலான பரிவர்த்தனை+1 (T+1) என்ற தீர்வு முறைக்கு மாறியது.
இந்தப் புதிய முறையானது முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டது.
சந்தை மூலதனமாக்கல் மூலமாக சிறிய நிறுவனங்களில் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை இது கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
T+2 தீர்வு சுழற்சியைக் கடைப்பிடிக்கும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகியவற்றிற்கு முன்னதாக, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த முறைக்கு மாறிய இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
ஒரு வர்த்தகம் என்பது தனித்தனி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தகம், கணக்கு நிறைவு மற்றும் தீர்வு ஆகிய மூன்று முக்கியச் செயல்பாடுகளை உள்ளடக்கியது.
அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் என்பது இதில் வர்த்தகம் ‘T’ என்ற எழுத்தினைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது.
தீர்வு கிடைக்கப் பெற்ற நாளினைத் தொடர்ந்து வரும் நாளிற்கு மறுநாள் கணக்குத் தீர்வு நடைபெறுவதால், முந்தைய வழிமுறை 'T+2' என வரையறுக்கப்பட்டது.
இனிமேல், இது அடுத்த நாளே தீர்வு செய்யப்படுவதால் இம்முறை T+1 என்றழைக்கப் படுகிறது.