தாமிரபரணி நதியை மறுசீரமைப்பதற்காக வேண்டி TamiraSES திட்டமானது செயல் படுத்தப் படுகிறது.
இந்தத் திட்டமானது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் பெங்களூரு நகரில் அமைந்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான அசோகா சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் அறக்கட்டளைச் சங்கம் (ATREE) ஆகியவற்றினால் இணைந்து செயல் படுத்தப் படுகிறது.
தாமிரபரணி நதியைப் புணரமைப்பதற்கு வேண்டி "கலப்பு முறை உள்நாட்டு அணுகுமுறை” என்ற முறையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டமானது தாமிரபரணி மற்றும் அதன் ஆற்றுப்படுகைகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் மீட்டெடுக்க உள்ளது.
இத்திட்டத்தினுடைய முதல் கட்டத்தின் கீழ் ஐந்து சமூகச் சூழலியல் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக உதவும் முதன்மை திட்டங்களாக இவை செயல்படும்.
திட்டத்தின் இந்தக் கட்டமானது திருநெல்வேலி மாவட்ட எல்லைகளுக்குள் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளது.
தாமிரபரணிஆறு
தாமிரபரணி நதியானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த பொதிகை மலையில் உள்ள அகஸ்தியர் கூடம் என்ற சிகரத்தில் இருந்து உருவாகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரே வற்றாத ஆறு இதுவாகும்.
இந்த நதியின் மூலாதாரம் கோதையாற்றின் துணை நதிகளான கோதை மற்றும் மதுமலை ஆகியவற்றின் சங்கம இடமாகும்.
இந்த நதியானது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்கிறது.