தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) ஆனது தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் லிமிடெட் (TNPDCL) என மறுபெயரிடப்பட்டுள்ளது.
இதன் பல்வேறு பிரிவுகளில் சுமார் 3.37 கோடி நுகர்வோர் உள்ளனர்.
2023-24 ஆம் ஆண்டில் 8.11 லட்சம் புதிய மின் சேவை இணைப்புகள் வழங்கப் பட்டு உள்ளன.
சமீபத்தில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) ஆனது TNGECL கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக லிமிடெட் (TNPGCL) ஆனது, புதைபடிவ எரிபொருள் தொடர்பான (நிலக்கரி, நாப்தா - இரசக் கற்பூரம் மற்றும் எரிவாயு) உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளின் நிர்வாகத்தினை மேற்கொள்ளும்.
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) ஆனது நீர், காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தி நடவடிக்கைகளின் நிர்வாகத்தினை மேற்கொள்ளும்.