கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கத்தின் (IACS) அறிவியல் ஆய்வாளர்கள், டைரோசில்-DNA பாஸ்போடையீஸ்ட்டிரேஸ் 1 (TDP1) எனப்படும் டிஎன்ஏ மறுசீரமைப்பு நொதியைத் தூண்டுவிப்பதன் மூலம் ஒரு புதிய சிகிச்சை முறையினை அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான கேம்ப்டோதெசின், டோபோடோகன் மற்றும் இரினோடெகன் ஆகியவை டோபோயிசோமரேஸ் 1 (Top1) என்ற நொதியைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன.
புற்றுநோய் செல்கள் ஆனது பெரும்பாலும் இந்த மருந்துகளுக்கு பெரும் எதிர்ப்பை உருவாக்குவதால், முன்னணி ஆராய்ச்சியாளர்கள் சில மாற்று சிகிச்சை உத்திகளைக் கண்டறிய இது வழி வகுக்கிறது.
TDP1 நொதியினைத் தூண்டுவதன் மூலமான Top1 நொதியை இலக்காகக் கொண்ட கீமோதெரபி சிகிச்சையில் இருந்து தப்பும் புற்றுநோய் செல்கள் உயிரணுப் பிரிகையின் போது சேதமடைந்த டிஎன்ஏவை சரி செய்ய உதவும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த செயல்முறையானது புற்றுநோய் செல்கள் கீமோதெரபி சிகிச்சையின் சில விளைவுகளை எதிர்க்கவும், தொடர்ந்து பெருகவும் வழி வகுக்கிறது.