TNPSC Thervupettagam
October 18 , 2024 35 days 99 0
  • கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கத்தின் (IACS) அறிவியல் ஆய்வாளர்கள், டைரோசில்-DNA பாஸ்போடையீஸ்ட்டிரேஸ் 1 (TDP1) எனப்படும் டிஎன்ஏ மறுசீரமைப்பு நொதியைத் தூண்டுவிப்பதன் மூலம் ஒரு புதிய சிகிச்சை முறையினை அடையாளம் கண்டுள்ளனர்.
  • தற்போது பயன்பாட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான கேம்ப்டோதெசின், டோபோடோகன் மற்றும் இரினோடெகன் ஆகியவை டோபோயிசோமரேஸ் 1 (Top1) என்ற நொதியைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன.
  • புற்றுநோய் செல்கள் ஆனது பெரும்பாலும் இந்த மருந்துகளுக்கு பெரும் எதிர்ப்பை உருவாக்குவதால், முன்னணி ஆராய்ச்சியாளர்கள் சில மாற்று சிகிச்சை உத்திகளைக் கண்டறிய இது வழி வகுக்கிறது.
  • TDP1 நொதியினைத் தூண்டுவதன் மூலமான Top1 நொதியை இலக்காகக் கொண்ட கீமோதெரபி சிகிச்சையில் இருந்து தப்பும் புற்றுநோய் செல்கள் உயிரணுப் பிரிகையின் போது சேதமடைந்த டிஎன்ஏவை சரி செய்ய உதவும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த செயல்முறையானது புற்றுநோய் செல்கள் கீமோதெரபி சிகிச்சையின் சில விளைவுகளை எதிர்க்கவும், தொடர்ந்து பெருகவும் வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்