கல்வியின் தரத்தை உயர்த்தும் ஒரு நடவடிக்கையாக, மத்திய அரசானது Teacher என்ற செயலியினைப் புது டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எண்ணிமத் தளமானது, தொடர்ச்சியான தொழில்முறை வளர்ச்சியை நன்கு ஊக்குவிப்பதற்காக 21 ஆம் நூற்றாண்டின் வகுப்பறைகள் பற்றிய சில தேவையானத் திறன்களை ஆசிரியர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது படிப்புத் திட்டங்கள், ஒளிப்படக் காட்சிகள், எண்ணிம ஒலி வடிவ ஒலிபரப்புகள், இணையம் சார்ந்த கருத்தரங்கங்கள், வினாடி வினாக்கள் மற்றும் பலவற்றை நன்கு உள்ளடக்கிய 260 மணிநேர உயர்தர உள்ளடக்கத்தை வழங்குகிறது.
இது கற்பித்தல் நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் மாணவர் ஈடுபாட்டை நன்கு அதிகரித்தல் ஆகியவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டது.