குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் அமைச்சகமானது வர்த்தக செயல்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் (TEAM) என்ற முன்னெடுப்பினைத் தொடங்கி உள்ளது.
இது "MSME உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல் (RAMP)" என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
இது MSME தொழில்துறைகளை எண்ணிம வர்த்தகத்தினை நன்கு ஏற்கவும், அவற்றின் சந்தை இருப்பை விரிவுபடுத்தவும் உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
RAMP என்பது உலக வங்கியால் ஆதரிக்கப்படும் மத்திய அரசின் திட்டமாகும் என்ற நிலையில் இது 2022-23 முதல் 2026-27 ஆம் ஆண்டு வரையில் 5 ஆண்டுக் காலத்திற்கு அமல்படுத்தப் படுகிறது.