TNPSC Thervupettagam
October 28 , 2018 2092 days 620 0
  • TECH 2018 என்ற சர்வதேச மாநாட்டை யுனெஸ்கோவின் மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்த ஆந்திரப் பிரதேச அரசானது அறிவித்திருக்கின்றது.
  • இது அமைதியான மற்றும் நீடித்த சமூகங்களை உருவாக்குவதற்காக கல்வி கற்கும் கல்வியமைப்பிலிருந்து உருமாற்றும் கல்வியமைப்பு முறைக்கு மாறுவதில் விளையாட்டுகள் மற்றும் எண்முறை (Digital) கற்றலின் பங்கினை எடுத்துக் காட்டிட எண்ணுகின்றது.
  • இந்த 3 நாள் நிகழ்வு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரத்தில் நோவோடெல் என்னுமிடத்தில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெற இருக்கின்றது.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள முதலாவது மற்றும் ஒன்றே ஒன்றான “வகை 1” என்ற ஆராய்ச்சி நிறுவனம் யுனெஸ்கோவின் மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் ஆகும். வகை 1 என்பது கல்வி அமைப்புகளில் சமூக உணர்ச்சிகளுக்கான கல்வியை முக்கியமாக்குவதில் கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்