TNPSC Thervupettagam

TECH 2019 - யுனெஸ்கோ மற்றும் MGIEP

December 17 , 2019 1712 days 632 0
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது (United Nations Education, Scientific and Cultural Organisation - UNESCO) அமைதிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்துடன் (Mahatma Gandhi Institute of Education for Peace - MGIEP) இணைந்து TECH 2019ஐ நடத்தியுள்ளது.
  • கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக இந்த TECH கருத்தரங்கு நடத்தப்பட்டது.
  • TECH என்பது மனிதநேயத்திற்கான மாறிவரும் கல்விமுறைக் கருத்தரங்கு என்பதைக் குறிக்கின்றது.
  • இந்தக் கருத்தரங்கானது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒரு நிலையான வகையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘யுனெஸ்கோ MGIEPயின் நண்பர்கள்’ எனப்படும் நாடுகளைக் கொண்ட குழுவிலும் கவனம் செலுத்தியது.
  • இந்தக் கருத்தரங்கில் ‘டிஜிட்டல் கற்றலுக்கான வழிகாட்டுதல்கள்’ குறித்த “விசாகப் பட்டினம் பிரகடனத்தின்” மீதும் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்