காந்திநகரில் நடைபெற்ற G20 EMPOWER உச்சி மாநாட்டில் பாலின எண்ணிம இடைவெளியைக் குறைக்க முற்படும் TechEquity எனப்படும் உள்ளார்ந்த எண்ணிம தளத்தினை இந்தியா அறிமுகம் செய்தது.
அடுத்த ஆண்டில் உலகெங்கிலும் உள்ள இரண்டு முதல் மூன்று மில்லியன் பெண்களுக்கு இந்தத் தளம் பயனளிக்கும்.
இது எண்ணிம மற்றும் நிதியியல் கல்வியறிவு, தொழில்நுட்ப திறன் மேம்பாடு மற்றும் முக்கியத் திறன் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த தரத்திலான கல்வியைத் தொகுத்து வழங்கும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவால் நிதியளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் தளமானது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படும்.