TEMPO என்பது புவி நிலை சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் முதலாவது புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
TEMPO செயற்கை கோள் ஆனது, வளிமண்டல மாசுபாடுகள் குறித்த ஒரு மணி நேர அடிப்படையிலான தகவல்களை வழங்குவதோடு இது காற்றுத் தரம் குறித்த விரிவான தகவல்களையும் வழங்குகிறது.
இது தென் கொரியாவின் GEMS மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் எதிர்கால செயற்கைக் கோளுடன் கூடிய மெய்நிகர் செயற்கைக் கோள் தொகுப்பின் ஒரு பகுதியாக மாறும்.
எனவே, இது வடக்கு அரைக்கோளத்தில் பரந்த அளவில் காற்று மாசு கண்காணிப்பை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவசர கால (நெரிசல் மிக்க நேரங்கள்) மாசுபாடு, மேம்படுத்தப்பட்ட காற்றுத் தர எச்சரிக்கை அமைப்புகளின் திறன், ஓசோனில் மின்னல் நிகழ்வுகளின் விளைவுகள், காட்டுத் தீ மற்றும் எரிமலைகளால் ஏற்படும் மாசுபாட்டின் தாக்கம் மற்றும் உரப் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்ட மாசுபாடுகளை பகுப்பாய்வு செய்ய TEMPO செயற்கைக்கோள் உதவும்.