TNPSC Thervupettagam
August 19 , 2024 96 days 155 0
  • இந்தூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வேண்டி பத்து இணை உராய்வு மின்னியல் சார் சிறிய மின்னியற்றி (TENG) அடிப்படையிலான காலணிகளின் அடித்தோல் பகுதியில் அமைந்த ஆற்றல் உருவாக்க அலகுகளை வழங்கியுள்ளது.
  • இந்த காலணிகள், மனித இயக்கத்திலிருந்து உருவாகும் ஆற்றலைப் பயன்படுத்தச் செய்வதற்காக வேண்டி வடிவமைக்கப் பட்டுள்ளன என்ற நிலையில் இது மின்னணுச் சாதனங்களுக்கான நிலையான ஆற்றல் மூலத்தை வழங்குகிறது.
  • இந்த காலணிகள் மனிதர்களின் ஒவ்வொரு அடியிலும் ஆற்றலை உருவாக்குவதற்காக மேம்பட்ட உராய்வு மின்னியல் இணைகளைப் பயன்படுத்துகின்றன.
  • இந்தக் காலணிகளில் RFID மற்றும் நேரடி இருப்பிட கண்காணிப்புக்கான செயற்கைக் கோள் அடிப்படையிலான புவியிடங்காட்டி தொகுதி போன்றவை உள்ளிட்ட அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பமும் பொருத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்