TNPSC Thervupettagam

TERI செயல் திட்டம்

August 1 , 2022 720 days 729 0
  • எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனமான TERI இந்தியாவின் கார்பன் நீக்க இலக்குகளை அடையச் செய்வதற்கான சாத்தியமான நடவடிக்கைகளுக்கான செயல் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.

பரிந்துரைகள்

  • தனியார் முதலீட்டுக்கு போதுமான ஈர்ப்புமிக்க, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் வழங்கப் படும் மின் ஆற்றல்களுக்கு அதற்கான கட்டணம் வழங்கும் முறையை அறிமுகப் படுத்துவதன் மூலம் பரவலாக்கப்பட்ட சூரிய சக்தியின் மீதான பங்கினை அதிகரித்தல்.
  • இந்தியாவில் இதற்காக முறையான கொள்கை வழங்கீடுகள் உள்ளன.
  • கட்டமைப்பிற்கு நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டு வரும் புதிய ஆற்றல் சேமிப்பு முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியா பின்பற்ற வேண்டும்.
  • காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியை ஒருங்கிணைப்பதற்குத் தேவையான நெகிழ்வுத் தன்மையை மின் கட்டமைப்பில் அறிமுகப்படுத்துதல்
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான செலவு குறைந்த மற்றும் போட்டித் திறன் கொண்ட உற்பத்தி மையமாக இந்தியா முன்னேறுவதற்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • வழங்கீட்டு நிறுவனங்கள் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு கார்பன் சாராத மின்சாரத்தை வாங்குவதற்கான விருப்பத் தெரிவுகளை வழங்க வேண்டும்.
  • புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உபகரணங்கள் முழுமையும் உள்ளடக்கும் வகையில் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் விரிவுப்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்