TESS (Transiting Exoplanet Survey Satellite) எனும் புறக்கோள்களின் விவரம் சேகரிக்கும் செயற்கைக் கோளானது தனது இரண்டு ஆண்டுக் கணக்கெடுப்பின் போது 75% விண்மீன்கள் நிறைந்த வானத்தைப் புகைப்படப் பதிவு செய்யும் முதன்மைப் பணியை முடித்து 66 புதிய புறக்கோள்களையும் கண்டறிந்துள்ளது.
நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்களால் ஏற்படும் பிரகாச குறைபாட்டைக் கொண்டு நட்சத்திரங்களைக் கண்காணிக்க TESS ஆனது ட்ரான்சிட் (Transit) என்ற ஒரு முறையைப் பயன்படுத்துகிறது.
TESS எனும் புறக்கோள் கண்டறியும் விண்வெளி தொலைநோக்கியானது 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.