TNPSC Thervupettagam

THAAD எறிகணை பாதுகாப்பு அமைப்பு

October 21 , 2024 8 days 88 0
  • அமெரிக்காவானது THAAD எனப்படுகின்ற தனது மேம்பட்ட எறிகணைப் பாதுகாப்பு அமைப்பினையும், அதனை இயக்கத் தேவையான பிரிவினரையும் சேர்த்து இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
  • THAAD என்பது உயர் பகுதிகளில் இயக்கக் கூடிய இறுதிக் கட்ட பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
  • இது எதிரி நாட்டு எறிகணைகளை இடைமறித்து அழிக்கப் பயன்படுகிறது.
  • ஒரு THAAD அமைப்பானது 95 வீரர்கள், வாகனத்தில் ஏற்றப்பட்ட ஆறு ஏவு அமைப்புகள், 48 இடைமறி கணைகள் (ஒரு ஏவு அமைப்பிற்கு எட்டு), ரேடார் கண்காணிப்பு மற்றும் ரேடார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இது குறுகிய தூரம் (1,000 கிலோ மீட்டர் வரை), நடுத்தர தூரம் (1,000-3,000 கிலோ மீட்டர்) ஆகிய வரம்புகளில் விரைவாக நிலைப்படுத்தும் திறன் கொண்டது.
  • இது அவற்றின் இறுதி (முனைய) கட்டத்தின் போது வளிமண்டலத்திற்கு உள்ளே அல்லது வெளியே வரையறுக்கப்பட்ட இடைநிலை-வரம்பு (3,000-5,000 கிமீ) உந்துவிசை எறிகணை அச்சுறுத்தல்களை மறிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்