TNPSC Thervupettagam

THE இதழின் ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை 2023

June 27 , 2023 388 days 226 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர் கல்வி இதழின் (THE) வருடாந்திர ஆசியப் பல்கலைக் கழகத் தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் பதினெட்டு இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்திய அறிவியல் கல்விக் கழகமானது, இப்பட்டியலில் இடம் பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்களில் 48வது இடத்தினைப் பெற்று, தொடர்ந்து உயர்ந்த இடத்தைப் பெற்ற ஒரு கல்வி நிறுவனமாக உள்ளது.
  • கடந்த ஆண்டின் தரவரிசையில், 17 உயர்கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுள் இடம் பெற்றன.
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (2022 ஆம் ஆண்டில் 167வது இடம்) மற்றும் காந்தி நகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம் (கடந்த ஆண்டு 120வது இடம்) ஆகிய முக்கியக் கல்வி நிறுவனங்கள் இந்த ஆண்டிற்கான தரவரிசையில் முதல் 200 இடங்களில் இடம் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்