THE இதழானது, 2024 ஆம் ஆண்டிற்கான ஒட்டு மொத்த பல்கலைக்கழகங்களின் தாக்க தரவரிசையில் 125 நாடுகள்/பிராந்தியங்களைச் சேர்ந்த 2,152 பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்துள்ளது.
96 கல்வி நிறுவனங்களுடன், இந்தப் பட்டியலில் அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக இந்தியா உள்ளது. அதைத் தொடர்ந்து துருக்கி (91) மற்றும் பாகிஸ்தான் (89) இடம் பெற்றுள்ளன.
அமிர்த விஸ்வ வித்யாபீடமானது 81வது இடம் பிடித்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
சென்னையின் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனம் ஆனது 201 முதல் 300 வரையிலான பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் ஆனது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஐக்கியப் பேரரசின் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
ஐக்கியப் பேரரசு ஆனது பொறுப்பு மிக்க நுகர்வு மற்றும் உற்பத்தியில் (SDG 12) சிறந்த செயல்திறன் கொண்ட பல்வேறு பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளது.
தென் கொரிய நாடானது, குறிப்பாக பண்பார்ந்த வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (SDG 8) விவகாரங்களில் செயல்திறன் மிக்கதாக உள்ளது.