TNPSC Thervupettagam

The coldest year of the rest of their lives அறிக்கை

November 4 , 2022 753 days 420 0
  • யுனிசெப் அமைப்பானது, சமீபத்தில் "The coldest year of the rest of their lives" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் எத்தனை குழந்தைகள் பின்வரும் 4 வகை வெப்ப அலைகளின் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதற்கான மதிப்பீடுகளை இது வழங்கியது.
  • அந்த 4 வகை பாதிப்புகள் - அதிக வெப்ப அலை அதிர்வெண், அதிக வெப்ப அலை கால அளவு, வெப்ப அலையின் அதிக தீவிரம் மற்றும் மிக அதிக வெப்பநிலை.
  • "குறைந்த பசுமை இல்ல வாயு உமிழ்வு சூழ்நிலை" (1.7 டிகிரி செல்சியஸ் வெப்ப மயமாதல்) மற்றும் "மிக அதிகப் பசுமை இல்ல வாயு உமிழ்வு சூழ்நிலை" (2.4 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல்) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை மதிப்பீடு செய்யப்பட்டது.
  • பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அலைகள் தவிர்க்க முடியாத ஆபத்தாக மாறி பூமியில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் பாதிக்கும்.
  • சுமார் 624 மில்லியன் குழந்தைகள் தற்போது மற்ற மூன்று உயர் வெப்பச் செயல்பாடுகளுள் ஒன்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் வடக்குப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் வெப்ப அலையின் தீவிரத் தன்மையில் மிகவும் வியத்தகு அதிகரிப்பின் தாக்கத்தினை எதிர்கொள்வர்.
  • ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் கிட்டத்தட்ட 50 சதவீத குழந்தைகள் மிக அதிக வெப்ப நிலையினால் தொடர்ந்து பாதிக்கப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்