TNPSC Thervupettagam

THE இதழின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2024

October 2 , 2023 291 days 237 0
  • 2024 ஆம் ஆண்டு THE இதழின் தரவரிசையின் படி, ஐக்கியப் பேரரசின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆனது உலகின் முன்னணிப் பல்கலைக் கழகமாகும்.
  • ஸ்டான்போர்டு பல்கலைக்கழகமானது இரண்டாவது இடத்தையும், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
  • 2024 ஆம் ஆண்டு THE இதழின் தரவரிசையின் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற ஏழு பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை என்ற நிலையில், மற்ற மூன்றும் ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்தவையாகும்.
  • பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது மீண்டும் இந்தியாவின் சிறந்த நிறுவனமாகப் பெயர் பெற்றுள்ளது.
  • இந்தியாவின் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து 91 இந்தியப் பல்கலைக் கழகங்கள் இந்த ஆண்டின் தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
  • கடந்த ஆண்டு இந்தியாவின் 75 நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தரவரிசையில் இடம் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்