TNPSC Thervupettagam

THE இதழின் பல்கலைக்கழக தாக்க தரவரிசை 2024

June 19 , 2024 157 days 258 0
  • THE இதழானது, 2024 ஆம் ஆண்டிற்கான ஒட்டு மொத்த பல்கலைக்கழகங்களின் தாக்க தரவரிசையில் 125 நாடுகள்/பிராந்தியங்களைச் சேர்ந்த 2,152 பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்துள்ளது.
  • 96 கல்வி நிறுவனங்களுடன், இந்தப் பட்டியலில் அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக இந்தியா உள்ளது. அதைத் தொடர்ந்து துருக்கி (91) மற்றும் பாகிஸ்தான் (89) இடம் பெற்றுள்ளன.
  • அமிர்த விஸ்வ வித்யாபீடமானது 81வது இடம் பிடித்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
  • சென்னையின் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனம் ஆனது 201 முதல் 300 வரையிலான பிரிவில் இடம் பெற்றுள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் ஆனது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • ஐக்கியப் பேரரசின் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • ஐக்கியப் பேரரசு ஆனது பொறுப்பு மிக்க நுகர்வு மற்றும் உற்பத்தியில் (SDG 12) சிறந்த செயல்திறன் கொண்ட பல்வேறு பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளது.
  • தென் கொரிய நாடானது, குறிப்பாக பண்பார்ந்த வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (SDG 8) விவகாரங்களில் செயல்திறன் மிக்கதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்