சுமார் 65 என்ற அளவில் பல்கலைக்கழகங்களைக் கொண்டு, இந்தத் தரவரிசையில் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்கள் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது, இந்தியக் கல்வி நிறுவனங்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று, உலக அளவில் 42வது இடத்தைப் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து VIT பல்கலைக்கழகம் ஆனது 65வது இடத்தையும், SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆனது 84வது இடத்தையும் பெற்றுள்ளன.
இதன் முதல் 10 இடங்களில் உள்ள இடம் பெற்ற ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் நாடு தனித்துவம் பெற்றுள்ளது.
இந்தத் தரவரிசையில், 47 பல்கலைக்கழகங்களுடன் முதல் 100 இடங்களுக்குள் அதிகப் பிரதிநிதித்துவம் பெற்ற கண்டமாக ஆசியா உள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இந்தத் தர வரிசையில் முதலிடம் பிடித்தது.
இதில் அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.