சீனாவானது சமீபத்தில் Three Gorges Antarctic Eye எனப்படுகின்ற தொலைநோக்கியை அண்டார்டிகாவில் திறந்து வைத்துள்ளது.
சுமார் 3.2-மீட்டர் ரேடியோ / மில்லிமீட்டர் கொண்ட அலை தொலைநோக்கியானது, நட்சத்திர உருவாக்கம் மற்றும் அவற்றைத் தாங்கி நிற்கும் பரந்த வாயுத் திரளின் பிணைப்புகள் ஆகியவை குறித்த இரகசியங்களை வெளிக் கொணர்வதற்காக என்று வடிவமைக்கப் பட்டு உள்ளது.
முதன்மையான அறிவியல் பூர்வ நோக்கத்தில், பால் வெளி அண்டத்தின் நடுநிலை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா நிறமாலைகளை ஆய்வு செய்வதின் மீது கவனம் செலுத்துவதும் அடங்கும்.