TNPSC Thervupettagam

TIFR நிறுவனத்தின் கார்பன் ஆக்சைடை மாற்றும் செயல்முறை

May 15 , 2021 1200 days 622 0
  • டாடாவின் மூலாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research – TIFR) அறிவியலாளர்கள் விலை மலிவான கார்பன் டை ஆக்சைடை மாற்றும் ஒரு செயல்முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • மெக்னீசியத்தினைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்தச் செயல்முறையில் மீத்தேன், மெத்தனால், பார்மிக் அமிலம் மற்றும் சில ஹைட்ரஜன் ஆகியவற்றைப் பெறுவதற்காக கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் மெக்னீசியம் போன்றவை அறை வெப்பநிலையிலும் அறை அழுத்தத்திலும் ஒன்றோடு ஒன்று கலக்கப்படுகின்றன.
  • மெக்னீசியம் கார்போனேட் என்பது இந்தச் செயல்முறையில் கிடைக்கும் ஒரு துணை விளைபொருளாகும்.
  • இந்தச் செயல்முறையானது பசுமை சிமெண்ட் தயாரிப்பிலும் மருந்தியல் துறையிலும் பயன்படுத்தப் படுகிறது.
  • இந்தச் செயல்முறையைக் கொண்டு செவ்வாய்க் கிரகத்தில் மீத்தேனை உருவாக்க இயலும்.
  • இந்தச் செயல்முறையானது அங்கு சாத்தியமாகும் ஏனெனில்
    • செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலமானது முற்றிலும் கார்பன் டை ஆக்சைடால் நிரம்பியது என்பதாலும்,
    • செவ்வாய்க் கிரகத்தில் நீரானது பனிக்கட்டி வடிவில் இருப்பதாலும்
    • செவ்வாய்க் கிரகத்தின் மண்ணில் அதிகளவு மெக்னீசியம் இருப்பதாலும் ஆகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்