TNPSC Thervupettagam

TIME இதழின் உலகின் சிறந்த நிறுவனங்கள் 2023

September 25 , 2023 298 days 219 0
  • TIME இதழின் 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் உள்ள ஒரே இந்திய நிறுவனம் இன்ஃபோசிஸ் ஆகும்.
  • இந்தத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமானது இப்பட்டியலில் இடம் பெற்ற மொத்தம் 750 உலக நிறுவனங்களில் 64வது இடத்தில் உள்ளது.
  • மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஆல்ஃபபெட்(கூகிள்) மற்றும் மெட்டா இணையதளம் (முக நூல்) ஆகியவை இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள நிறுவனங்களாகும்.
  • இந்தப் பட்டியலில் விப்ரோ நிறுவனம் 174வது இடத்திலும், ஆனந்த் மஹிந்திரா தலைமையிலான மஹிந்திரா குழுமம் 210 வது இடத்திலும் உள்ளன.
  • ரிலையன்ஸ் நிறுவனம் 248வது இடத்திலும், HCL டெக்னாலஜிஸ் 262வது இடத்திலும், HDFC வங்கி 418வது இடத்திலும், WNS குளோபல் சர்வீசஸ் நிறுவனம் 596வது இடத்திலும், இறுதியாக ITC நிறுவனம் 672வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்