TIME பத்திரிக்கையின் “எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் வளர்ந்து வரும் 100 தலைவர்களை” கொண்ட ஒரு வருடாந்தரப் பட்டியலில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலானது “2021 TIME 100 Next” என்று பெயரிடப் பட்டுள்ளது.
மேலும் இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 ஆளுமைகளையும் கொண்டுள்ளது.
சுட்டுரையின் முதன்மை வழக்குரைஞரான விஜயா கேத்தி
ஐக்கிய இராஜ்ஜியத்தின் நிதி அமைச்சரான ரிஷி சுனக்
இன்ஸ்டாகார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அபூர்வா மேத்தா
Get Us PPE என்ற ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் மருத்துவரான ஷிக்ஷா குப்தா
அட்சால்வ் என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனரான ரோகன் பவுலூரி