TNPSC Thervupettagam

TISS நிறுவனத்தின் SOTTTER அறிக்கை

January 29 , 2024 173 days 168 0
  • டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனமானது (TISS), "ஒவ்வொரு குழந்தைக்குமான முறையான ஆசிரியர்: ஆசிரியர்கள், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் கல்வியின் நிலை குறித்த அறிக்கை 2023" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா, பீகார், அசாம், சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் இருந்து தற்போது கிடைக்கப் பெறக் கூடிய தரவுகள் மற்றும் கணக்கெடுப்பு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், பிராந்திய மொழியில் குறைந்த அளவிலான திறன் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.
  • 90% ஆசிரியர்கள் சில வகையான தொழில்முறை தகுதி சான்றிதழைக் கொண்டு உள்ளனர்.
  • ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் 46% பேர் மட்டுமே தேவையான தகுதிச் சான்றிதழைக் கொண்டுள்ளனர்.
  • பல மாநிலங்களில், தனியார் துறையானது ஆசிரியர் பணியாளர் வளத்தில் உள்ள 40% அல்லது அதற்கு மேற்பட்ட ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
  • இந்தப் பள்ளிகளில் நூலகங்கள், கணினி ஆய்வகங்கள் மற்றும் இணைய அணுகல் போன்ற சிறந்த வசதிகள் உள்ள நிலையில், இது தனியார் பள்ளிகளில் 76% ஆகவும், அரசுப் பள்ளிகளில் 38% ஆகவும் உள்ளது.
  • தனியார் அல்லது அரசு சாரா பள்ளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் எழுத்துப் பூர்வ ஒப்பந்தங்கள் இல்லாமல் பணி புரிவதாகக் கூறினர்.
  • அரசுப் பள்ளிகளிலும், தங்கள் குழந்தைகளுக்கு கல்விக்கான போதிய வசதிகள் வழங்க முடியாத பெற்றோர்கள் அதிக விகிதத்தில் (41%) இருப்பதாகப் பதிவாகி உள்ளது.
  • அரசுப் பள்ளிகளில் 36 சதவீதம் மற்றும் தனியார் பள்ளிகளில் 65 சதவீதம் என ஒட்டு மொத்த உடற்கல்வி ஆசிரியர்கள் பணியமர்த்தல் குறைவாகவே உள்ளது.
  • 2009 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் ஆனது, மாணவர்-ஆசிரியர் விகிதமானது பள்ளி அளவில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு 30:1 ஆகவும் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு 35:1 ஆகவும் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்