T.M. காளியண்ணன் கவுண்டர் அவர்கள் சமீபத்தில் தனது 101வது வயதில் காலமானார்.
இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் கடைசியான முன்னாள் உறுப்பினராவார்.
இவர் தமிழ்நாட்டினுடைய சட்ட மேலவையின் உறுப்பினராகவும் 1952 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை சட்டமன்ற கீழவையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர் ஆவார்.
இவர் அப்போதைய அரசியலமைப்பு நிர்ணய சபையின் இளம் உறுப்பினராவார், மேலும் இந்தியாவின் முதல் தற்காலிகப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.