ரூ. 50 கோடிக்கும் மேலான வங்கி மோசடிகளை ஆய்வு செய்வதற்காகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரைப்பதற்காகவும் வங்கி மோசடிகளுக்கான ஆலோசனை வாரியத்தை (ABBF - Advisory Board for Banking Frauds) மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC - Central Vigilance Commission) அமைத்துள்ளது.
நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த வாரியமானது முன்னாள் கண்காணிப்பு ஆணையரான TM பசின் தலைமையில் செயல்படவிருக்கின்றது.
ரூ.50 கோடிக்கும் மேல் உள்ள அனைத்து வங்கி மோசடி வழக்குகளையும் வங்கிகள் ABBFற்குப் பரிந்துரைக்கும்.
இது மற்ற விசாரணை அமைப்புகள் விசாரிப்பதற்கு முன்பு அனைத்துப் பெரிய வங்கி மோசடி வழக்குகளை விசாரணை செய்யும் முதல்நிலை அமைப்பாக செயல்பட விருக்கின்றது.