TNPSC Thervupettagam
October 31 , 2018 2088 days 715 0
  • வடகிழக்கு பருவமழைக் காலத்தின் போது பயன்படுத்துவதற்கென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் புதிய முயற்சியான பல்வேறு அபாயங்களின் தாக்க மதிப்பீடு மற்றும் அவசரநிலை பதில் கண்காணிப்புக்கான தமிழ்நாடு அமைப்பை (TN-SMART) தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இந்த அமைப்பானது வெள்ளத்தால் மூழ்கக் கூடிய பகுதிகளுக்கான மழைப்பொழிவின் அளவை முன்கூட்டியே கணிக்கவும், பேரழிவுகள், பருவமழை, வறட்சிக் காலங்களில் உயிர் இழப்புகள் மற்றும் அசையும் சொத்துக்கள் சேதப்படுவதைத் தடுப்பதற்குத் தக்க பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பேரிடர் மேலாண்மைத் துறையின் திட்டமிடுதலுக்கு உதவும்.
  • TN-SMART ஆனது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து (Regional Integrated Multi-Hazard Early Warning System -RIMES) உருவாக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையுடன் பதிவுசெய்யப்பட்ட தாய்லாந்தை அடிப்படையாகக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்