TN REACH என்ற முன்னெடுப்பு, நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு நிறுவனம் சார்ந்த வழிமுறையானது உருவாக்கப்பட உள்ளது.
TN REACH என்பது ஹெலிகாப்டர்கள் மூலம் தமிழ்நாடு மாநிலத்தின் பிராந்திய வான் வழிப் போக்குவரத்து இணைப்பு என்பதன் சுருக்கமாகும்.
தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள 80க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர் ஏற்ற இறக்கத் தளங்களானது, தமிழக மாநில அரசு திட்டமிட்டுள்ள ஹெலிகாப்டர் சேவைகளுக்காக விரைவில் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும்.
தமிழ்நாடு தொழில்துறை கழகம் (Tidco) ஆனது இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்தச் செய்வதற்கான முகமையாக இருக்கும்.
இதற்கான ஒரு செயல்முறையானது பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும்.
ஹெலி திஷா - ஹெலிகாப்டர் சார்ந்த நடவடிக்கைகளுக்கான ஒரு நிர்வாக வழி காட்டுதல் கையேடு,
ஹெலி சேவா - ஹெலிகாப்டர் சார்ந்த நடவடிக்கைகளுக்கான தரையிறங்கும் அனுமதி வழங்குவதற்கான ஒரு இணைய தளம் ஆகியவை குறித்து தயாரிக்கப்பட உள்ளது.