TNPSC Thervupettagam

TN-RISE முன்னெடுப்பு 2024

July 24 , 2024 40 days 234 0
  • தமிழ்நாடு கிராமப்புற தொழில் காப்பு  மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயலாக்க (TN-RISE) முன்னெடுப்பின் கீழ் சுமார் 130 நிறுவனங்கள் வழிகாட்டுதல்களைப் பெறும்.
  • இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள பெண் தொழில்முனைவோர்களால் வழி நடத்தப் படுகின்ற புத்தொழில் நிறுவனங்களும் அடங்கும்.
  • ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, 31 மாவட்ட துவக்க முகாம்கள் நடத்தப்பட்டன என்ற நிலையில் இது சுமார் 2,500 நிறுவனங்களை ஈர்த்தது.
  • TN-RISE முன்னெடுப்பானது, தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்தின் (TNRTP) கீழ் ஒரு சிறப்பு நோக்க வசதியாக செயல்படுகிறது.
  • TN-RISE ஆனது:
    • கிராமப்புற பெண் தொழில் முனைவோர்களை அரசு மற்றும் அதன் திட்டங்களை அணுகுதலை எளிதாக்குதல்;
    • தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவனச் சமூகத்திற்கான அணுகல்; ஆதரவு வழங்கும் சமூகத்திற்கான அணுகல்; மற்றும்
    • இம்மாநிலத்தின் தொழில் முனைவோர்  சூழல் அமைப்பின் ஒரு பெரும் பகுதியாக இருப்பதற்கான அணுகல் ஆகியவற்றினைச் செயலாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்