தமிழ்நாடு கிராமப்புற தொழில் காப்பு மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயலாக்க (TN-RISE) முன்னெடுப்பின் கீழ் சுமார் 130 நிறுவனங்கள் வழிகாட்டுதல்களைப் பெறும்.
இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள பெண் தொழில்முனைவோர்களால் வழி நடத்தப் படுகின்ற புத்தொழில் நிறுவனங்களும் அடங்கும்.
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, 31 மாவட்ட துவக்க முகாம்கள் நடத்தப்பட்டன என்ற நிலையில் இது சுமார் 2,500 நிறுவனங்களை ஈர்த்தது.
TN-RISE முன்னெடுப்பானது, தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்தின் (TNRTP) கீழ் ஒரு சிறப்பு நோக்க வசதியாக செயல்படுகிறது.
TN-RISE ஆனது:
கிராமப்புற பெண் தொழில் முனைவோர்களை அரசு மற்றும் அதன் திட்டங்களை அணுகுதலை எளிதாக்குதல்;
தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவனச் சமூகத்திற்கான அணுகல்; ஆதரவு வழங்கும் சமூகத்திற்கான அணுகல்; மற்றும்
இம்மாநிலத்தின் தொழில் முனைவோர் சூழல் அமைப்பின் ஒரு பெரும் பகுதியாக இருப்பதற்கான அணுகல் ஆகியவற்றினைச் செயலாக்கும்.