வடகிழக்கு பருவமழைக் காலத்தின் போது பயன்படுத்துவதற்கென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் புதிய முயற்சியான பல்வேறு அபாயங்களின் தாக்க மதிப்பீடு மற்றும் அவசரநிலை பதில் கண்காணிப்புக்கான தமிழ்நாடு அமைப்பை (TN-SMART) தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த அமைப்பானது வெள்ளத்தால் மூழ்கக் கூடிய பகுதிகளுக்கான மழைப்பொழிவின் அளவை முன்கூட்டியே கணிக்கவும், பேரழிவுகள், பருவமழை, வறட்சிக் காலங்களில் உயிர் இழப்புகள் மற்றும் அசையும் சொத்துக்கள் சேதப்படுவதைத் தடுப்பதற்குத் தக்க பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பேரிடர் மேலாண்மைத் துறையின் திட்டமிடுதலுக்கு உதவும்.
TN-SMART ஆனது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து (Regional Integrated Multi-Hazard Early Warning System -RIMES) உருவாக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையுடன் பதிவுசெய்யப்பட்ட தாய்லாந்தை அடிப்படையாகக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.