TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 18 , 2021 1286 days 562 0
  • புதுச்சேரியானது “Zero Covid by Feb28” (பிப்ரவரி 28க்குள் சுழிய கோவிட்) என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
    • இது அந்த ஒன்றியப் பிரதேசத்தில் 2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி இறுதிக்குள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லாதவாறு உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேக்னா பந்த் அவர்கள் “The Terrible, Horrible, Very Bad Good News" என்ற ஒரு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில், மகாராஜா சுஹெல்தேவ் நினைவிடத்திற்கு பிரதமர் அவர்கள் இணைய வழியில் அடிக்கல் நாட்டினார்.
  • சர்வதேச சூரிய மின்சக்தி உற்பத்திக் கூட்டமைப்பானது டாக்டர் அஜய் மாத்தூரை அதன் புதிய தலைமை இயக்குநராக அறிவித்துள்ளது.
  • நீதிபதி புலிகோரு வெங்கட சஞ்சய் குமார் அவர்கள் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று உள்ளார்.
  • மரப் பொம்மைகள், உள்ளூர் கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை ஊக்குவிக்க மகாராஷ்டிர மாநில அரசானது பிளிஃப்கார்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகி அவர்கள் இத்தாலியின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்