TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 10 , 2021 1266 days 628 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தேசியப் புத்தக நிறுவனத்தால் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சி என்பதின் 2021 ஆம் ஆண்டுப் பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
    • இந்தப் புத்தகக் கண்காட்சியின் கருத்துரு, தேசியக் கல்விக் கொள்கை - 2020”  என்பதாகும்.
  • அனைத்துப் பெண் உறுப்பினர்களைக் கொண்ட கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் ஒரு கப்பலான எம்டி ஸ்வர்ணா கிருஷ்ணா கப்பலானது, நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை நிறுவனத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி வரலாறு படைத்துள்ளது.
    • உலக கப்பல் போக்குவரத்துத் துறையில் அனைத்தும் பெண் அதிகாரிகளால் முழுவதும் ஒரு கப்பல் இயக்கப் படுவது இதுவே முதன் முறையாகும்.  
  • இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் அவர்கள் உக்ரைனின் கீவ் நகரில் நடத்தப்பட்ட உக்ரைன் மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
    • டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை இவராவார்.
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது சுவச் சர்வேக்சன் – 2021 என்பதற்கான பகுதிசார் ஆய்வைத் தொடங்கியுள்ளது.
    • இது நகரங்களின் மீதான ஒரு தரவரிசையை வெளியிடுவதற்கான வருடாந்திர தூய்மை ஆய்வறிக்கையாகும் (4242 நகரங்கள்).
  • கர்நாடக மாநிலமானது நாட்டின் முதலாவது பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
  • அனிந்தியா தத்தா அவர்கள் பயனுரு இந்தியா : இந்திய டென்னிஸ் போட்டியின் கதைஎன்று பெயரிடப்பட்ட இந்திய டென்னிஸ் குறித்து ஒரு காலக் குறிப்பேட்டை எழுதியுள்ளார்.
  • இந்தியாவானது இலங்கையைப் பாதுகாப்புத் துறையில்முதல் முன்னுரிமைப் பங்காளராகஅறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்