TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 18 , 2021 1258 days 610 0
  • ரஷ்யாவை விஞ்சி மிகப் பெரிய அந்நியச்  செலாவணி இருப்பினைக்  கொண்ட உலகின் 4வது நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.
    • உலகிலேயே அதிக அந்நியச் செலாவணி இருப்பினைக் கொண்ட நாடாக சீனா உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகியவை இடம் பெற்று உள்ளன.
  • அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள், AEG 12 எனப்படும் ஒரு கொசுவின் புரதமானது மஞ்சள் காய்ச்சல், டெங்கு, ஜிகா மற்றும் வெஸ்ட் நைல் போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தின் பரவலைக் கடுமையாக தடுத்து நிறுத்துகிறது எனக் கண்டறிந்துள்ளனர்.
    • மேலும், அவை கொரோனா வைரஸ்களையும் வெகுவாக பலவீனப்படுத்துகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • புதுதில்லியிலுள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்