சர்வதேசக் கூட்டு ஆணையத்தினால் (Joint Commission International - JCI) அங்கீகாரம் பெற்ற 39 இந்திய மருத்துவமனைகளில் ஒன்றாகவும் சென்னையில் மூன்றாவது மருத்துவமனையாகவும் MGM ஹெல்த்கேர் மருத்துவமனை மாறியுள்ளது.
JCI என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளை மையமாகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு அவற்றின் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகிய வரைமுறைகளின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கும் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
ஓய்வூதியம் பெறுவதற்குக் கட்டாயமான ஜீவன் பிரமாண் எனப்படும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கு இனி ஆதார் கட்டாயமில்லை.
மேலும் அரசானது, தனது உடனடி குறுஞ்செய்தித் தீர்வு தளமான “சந்தேஷ்” என்பதற்கு ஆதார் சரிபார்ப்பு என்பது தன்னார்வ அடிப்படையிலானது என்று கூறியுள்ளது.