TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 11 , 2018 2291 days 802 0
  • இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி மேம்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய பணமளிப்பு சேவையான SWIFT (Society for World Interbank Financial Telecommunication System) அமைப்பின், உலகளாவிய புதுமையான பணமளிப்பு முறையில் (Global Payment Innovation -GPI) முதல் இந்திய வங்கியாக நேரலையில் இணைய இருக்கின்றது.
  • மதுபாணி ரயில் நிலையம் மிதிலா ஓவியங்கள் மூலம் முழுமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கரிப்பு இந்திய ரயில்துறையின் புதுமையான முயற்சி ஆகும். மிதிலா ஓவியம் என்பது இந்தியாவின் மிதிலா பகுதியிலும் (குறிப்பாக பீகாரில்) நேபாளத்திலும் கடைபிடிக்கப்படும் நாட்டுப்புற ஓவியக் கலை ஆகும். இது காட்டுத் தேன் எனப் பொருள்படும் மதுபாணி ஓவியங்கள் என்றும் அழைக்கப்படும். இது பழமையான இந்திய நூலான ராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • மிதிலா ஓவியங்கள் பெருமைமிகு புவிசார் குறியீடு என்ற தகுதியைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்