TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 16 , 2021 1229 days 573 0
  • பஞ்சாப் மாநிலத்தினுடைய கோவிட் தடுப்பூசித் திட்டத்தின் ஒரு மதிப்புமிகு தூதராக நடிகர் சோனு சூட் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் அவர்கள் கடல்சார் பொருட்களுக்கான 'இ-சாந்தா' (e-SANTA) எனும் தளத்தை அறிமுகப் படுத்தி உள்ளார்.
    • இந்தத் தளமானது மீன் மற்றும் கடல்சார் விவசாயிகளுக்கு வர்த்தகத்திற்கான அதிக வாய்ப்புகள், சுதந்திரம் மற்றும் வழிகளை வழங்கும்.
  • கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள், “மத்திய ஆசியா” என்று அழைக்கப் படும் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு சர்வதேச மையத்தின் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது.
  • பூடான் நாடானது சமீபத்தில் அதன் 93% முதியோர்களுக்குத்  தடுப்பூசியினைச்  செலுத்தியுள்ளது.
    • பூடான் நாடானது இந்தியாவிடமிருந்து அஸ்ட்ராஜெனெகா என்ற தடுப்பூசியைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்