TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 24 , 2021 1221 days 623 0
  • இந்திய இரயில்வேயானது மாநிலங்களில் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் மருத்துவத்திற்கான திரவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் உருளைகளை பசுமை இரயில் பாதைகள் வழியாகக் கொண்டு செல்லும் ‘ஆக்ஸிஜன் விரைவு இரயில்களை' இயக்க உள்ளது.
    • இந்த இரயில்களின் வேகமான இயக்கத்தை உறுதி செய்வதற்காக பசுமை இரயில் பாதைகள் உருவாக்கப் படுகின்றன.
  • மகரிஷி வால்மீகியின் காவியமான ராமாயணம் குறித்த முதல் இணையவழிக் கண்காட்சியை சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை  அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் அவர்கள் திறந்து வைத்தார்.
    • இந்தக் கண்காட்சியானது புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் 49 மிகச் சிறிய அளவிலான (மினியேச்சர்) ஓவியங்களைக் காட்சிப்படுத்தும்.
  • இந்திய விவசாயிகள் கூட்டுறவு உரங்கள் உற்பத்தி நிறுவனமானது குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் நான்கு ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ உள்ளது.
    • மருத்துவ ஆக்ஸிஜன் ஆலையானது புல்பூர் (உத்தரப் பிரதேசம்), கலோல் (குஜராத்) மற்றும் பாரதீப் (ஒடிசா) ஆகிய இடங்களில் அமைக்கப் படும்.
  • ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினம் எஃகு ஆலையிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு திரவ ஆக்சிஜனை அனுப்புவதற்கான முதல் ஆக்சிஜன் விரைவு இரயிலானது (ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்) நவி மும்பையிலிருந்து புறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்