TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 28 , 2021 1217 days 593 0
  • உலக ஆய்வக விலங்குகளுக்கான தினம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று கடைபிடிக்கப் படுகிறது (ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை ஆய்வக விலங்கு வாரம்).
    • இத்தினமானது 1979 ஆம் ஆண்டில் கூறாய்விற்கு எதிரான தேசியக் கழகத்தினால், ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் சர்வதேச நினைவு நாளாகதொடங்கப் பட்டது.
  • ஜெர்மனியிலிருந்து 23 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மற்றும் கொள்கலன்கள், வான்வழியாக இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட உள்ளது.
    • தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டினைப் போக்க ஜெர்மனியிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மற்றும் கொள்கலன்களை இந்தியாவிற்கு மருத்துவச் சேவைக்கான ஆயுதப் படை (Armed Forces Medical Service - AFMS) கொண்டு வர முடிவு செய்துள்ளது.
  • படைப்பாற்றலை மேம்படுத்துவதையும் சமூகத்திற்குச் சிற்பக்கலை ஆற்றிய பங்கினையும் அதன் தனித்துவத்தைப் புரிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ள சர்வதேச சிற்பக்கலை தினமானது உலகம் முழுவதும் கொண்டாடப் படும் ஒரு நிகழ்வாகும்.
    • சர்வதேச சிற்பக்கலை மையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இத்தினமானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று (ஏப்ரல் 24, 2021) அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு வருடாந்திர ஆசிய மாநாட்டிற்கான போவோ மன்றத்தின் தொடக்க விழாவானது தென் சீனாவின் ஹைனான் மாகாணத்திலுள்ள (Hainan Province) போவோவில் (Boao) நடைபெற்றது.
    • இம்மாநாட்டின் கருத்துரு, “மாற்றத்தில் உலகம் : உலகளாவிய ஆட்சிமுறையை வலுப்படுத்தவும், பட்டை மற்றும் சாலை திட்டத்திற்கான ஒத்துழைப்பினை மேம்படுத்தவும் கை கோருங்கள்என்பதாகும்.
  • Accenture இந்தியா என்ற நிறுவனத்தின் தலைவரான ரேகா M. மோகன் மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் (National Association  of Software and Service Companies – NASSCOM) தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இந்த மென்பொருள் நிறுவனக் குழுவின் 30 ஆண்டுகால வரலாற்றில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் முதல் பெண்மணி எனும் பெருமையை இவர் பெற்று உள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டு உலக நோய்த் தடுப்பு வாரமானது (ஏப்ரல்  24 முதல் ஏப்ரல் 30 வரை) எல்லா இடங்களிலும், வாழ்நாள் முழுவதும் அனைவரின் உடல்நலனையும் தடுப்பூசியானது  எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
    • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தடுப்பூசிகள் நம்மை ஒன்றிணைக்கின்றன” (Vaccines bring us closer) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்