TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 1 , 2021 1214 days 626 0
  • காலநிலை மாற்றம் மீதான பாரிஸ் உடன்படிக்கையினை அமல்படுத்துவதற்கு  ஆதரவு அளிப்பதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களுக்கான நிகர பூஜ்ஜிய உற்பத்தியாளர்கள் மன்றத்தினை” (Net Zero Producers Forum) சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா, நார்வே மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் அமைக்க உள்ளன.
  • ‘டீப் டைம்’ (Deep Time - ஆழ்நேர திட்டம்) என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக பிரான்சில் 15 நபர்கள் கொண்ட குழு ஒன்று 40 நாட்கள் மற்றும் 40 இரவுகளுக்கு ஒரு குகையினுள் ஆய்வு செய்தனர்.
    • வாழ்க்கை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களோடு மக்கள் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்கின்றனர் என்பதைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்வதேடீப் டைம்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தோ-பசிபிக் பகுதிகளில் விநியோகத் தொடர் சங்கிலியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர்கள் இணைந்து விநியோகத் தொடர் சங்கிலி நெகிழ்திறன் என்ற முன்னெடுப்பினை (Supply Chain Resilience Initiative – SCRI) தொடங்கியுள்ளனர்.
    • எஸ்.சி.ஆர்.ஐ முன்னெடுப்பானது தனது பிராந்தியத்தில் வலுவான, நிலையான, சீரான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கான ஒரு நோக்கத்துடன் விநியோகத் தொடர் சங்கிலி நெகிழ்திறனை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு பலன் ஈட்டும் சுழற்சி முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்