வெவ்வேறு தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் (TSPs-Telecom service providers) மற்றும் வெவ்வேறு உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளின் (Licensed Service Areas-LSAs) கட்டணங்களை ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் காண வகை செய்வதற்காக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (Telecom Regulatory Authority of India-TRAI) tariff.trai.gov.in எனும் மேம்பாட்டுப் பதிப்பு (beta version) நிலையிலான இணையவாயில் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
மூத்த அரசு அதிகாரியான திரு.சந்திர பூஷன் குமார் அவர்களை மத்திய அரசு துணை தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது. இவர் ஐந்து ஆண்டுகள் இப்பதவியிலிருப்பார்.