TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 6 , 2021 1178 days 577 0
  • சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் முறைப்படுத்தப்படாத மீன்பிடிப்பிற்கு எதிரான சர்வதேச தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது.
    • இந்த தினமானது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐ.நா பொதுச் சபையில் அறிவிக்கப் பட்டது.
  • தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பத் தளத்தில் டிஜிட்டல் முறையிலான முதன்மை சுகாதாரத் திட்டங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் தொடங்கி வைத்தார்.        
    • மத்திய அரசின் புனரமைக்கப்பட்ட சுகாதாரத் திட்டங்கள் மற்றும் ராஷ்டிரிய ஆரோக்கிய நிதியின் தலைமைத் திட்டம் ஆகியவற்றையும் சுகாதார அமைச்சரின் தன்விருப்ப நிதி போன்றவற்றையும் தேசிய சுகாதார திட்டத்தின் தளத்தில் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தினை 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீது செலுத்துதல் மீதான ஒரு சோதனையானது பாட்னாவிலுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் (எய்ம்ஸ்) தொடங்கப் பட்டது.
  • 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெற உள்ள ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியானது மீண்டும் 14 அணிகளைக் கொண்டதாக (54 போட்டிகளைக் கொண்டிருக்கும்) இருக்கும் என சர்வதேச மட்டைப் பந்து வாரியமானது (Internal Cricket Council – ICC) அறிவித்துள்ளது.
    • 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்ற நிலையில் 2019 ஆம் ஆண்டின் உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்றன.
  • சர்வதேச பால்பொருள் கூட்டமைப்பானது (International Dairy Federation – IDF) R.S. சோதி அவர்களைத் தனது வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தது.
    • இவர் இந்தியாவில் அமுல் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால்பொருட்கள் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்