TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 8 , 2021 1176 days 665 0
  • டாக்டர் பேட்ரிக் அமோத் என்பவர் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக ஒரு வருடக் காலத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இவர் கென்யாவின் சுகாதார அமைச்சகத்தின் தற்காலிகத் தலைமை இயக்குநர் ஆவார்.
  • இந்த ஆண்டு ஜோடி ஃபோஸ்டர் அவர்களுக்கு ‘பால்மே டிஓர்’ என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட உள்ளதாக கேன்ஸ் திரைப்பட விழா அமைப்பானது அறிவித்துள்ளது.
    • ஜோடி ஃபோஸ்டர் அவர்கள் இருமுறை ஆஸ்கர் விருதினை வென்றவராவார்.
  • வேதிப்பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலனை ஏற்றிச் சென்ற MV X-ப்ரஸ் பியர்ஸ் எனும் ஒரு கப்பலில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும்  ஒரு முயற்சியில் இலங்கை அரசின் அதிகாரிகளுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவற்படையும் ஈடுபட்டுள்ளது.
    • இந்த ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைக்கு ‘சாகர் ஆரக்சா – II’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்